பிரதேச செயலக பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்படவேண்டும் – அமைச்சர் வஜிர அபேவர்த்தன!

நாட்டில் தற்போதுள்ள 332 பிரதேச செயலக பிரிவுகள் 377 ஆக அதிகரிக்கபட வேண்டும் என்று உள்ளக ,உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
தமது அமைச்சு மேற்கொண்ட மதிப்பீட்டில் இந்த விடயம் கண்டறியப்பட்டதாக தெரிவித்த, அமைச்சர் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பிரதேச செயலகப் பிரிவுகள் தொடர்பில் அரசாங்கம் மதிப்பீடுகளை முன்னெடுப்பதாகவும் கூறினார்.
நாட்டில் தற்போது 14 ஆயிரத்து 22 கிராம உத்தியோகத்தவர் பிரிவுகள் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் 500 ஆல் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் , இந்த மதிப்பீட்டின் போது பிரதேச செயலகப் பிரிவுகளின் சனத்தொகை உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
காணி உரிமங்களை பெற்றுக்கொள்ள உதவி புரியுங்கள் - அரியாலை கிழக்கு பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியி...
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் திங்கட்கிழமை வரை விண்ணப்பிக்கலாம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...
அட்டை விநியோகத்தின் போதான நிபந்தனையொன்று தளர்வு!
|
|