பால்மாவுக்கு வட் வரி நிவாரணத்தை வர்த்தகர்கள் வழங்கவில்லை – நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சு!

Monday, January 13th, 2020


அரசாங்கம் வழங்கிய வட் வரி நிவாரணத்தை இதுவரையில் பால்மாவுக்கு வழங்க வர்த்தகர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சு தெரிவித்துள்ளது.

வட் வரி நிவாரணத்தின் அடிப்படையில் 400 கிராம் பால் மா பொதியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும். என்று தெரிவித்துள்ள வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சின் செயலாளர் ஜி.கே.எஸ்.என்.ராஜதாச, இது தொடர்பில அடுத்த வாரம் தொடக்கம் ஆராய நுகர்வோர் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறினார்.

இந்த நிவாரணம் ஜனவரி மாதம் முதல், புதியதயாரிப்புக்களுக்கு வழங்கப்படும் என்று பால்மா வர்த்தகர்கள் தெரிவித்திருந்த போதிலும் இதுவரையில் விலை குறைக்கப்படவில்லை என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.


இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளில் 187 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு!
அரச நிறுவனங்களுக்கான தபால் விநியோகம் இடைநிறுத்தப்படும் - கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி!
கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்கள் நடத்த தடை - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
 வாகன பதிவு அதிகரிப்பு!
பகிடிவதை தொடர்பில் 300 முறைப்பாடுகள் - உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு!