பலாலி – சென்னை விமான சேவையை தடுக்க பேரம்பேசலா?

Sunday, September 8th, 2019

விரைவில் வலாலி விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படாதிருக்க முக்கிய பேரம் பேசல்கள் கொழும்பு வர்த்தகர் மட்டத்தில் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பெருமளவு தமிழ் பயணிகள் நாள் தோறும் சென்னைக்கு பல்வேறு தேவைகள் நிமித்தம் பயணித்துவருகின்றனர். இதனால் கொழும்பு – சென்னையிடையே கூடிய விமான சேவைகள் நடைபெற்றுவருகின்றது.

எனினும் யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாக சென்னைக்கான விமான சேவை நடைபெற்றால் இதனால் பின்னடைவுகள் ஏற்படுமென கொழும்பு மைய வர்த்தக சமூகம் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றது. அதனாலேயே அரச தரப்பில் குறித்த விமான சேவை தொடர்பில் மௌனம் காக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே பலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாணம் விமான நிலையம் என்கின்ற பெயரில் அபிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. முதலாவது கட்டமாக இந்தியாவுக்கு மாத்திரம் தான் விமான சேவை இடம்பெறும். ஆனாலும் காலக்கிரமத்தில் அது சர்தேச மட்டத்தில் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்யும் விமான நிலையமாக மாறும் என்றும் தெரவிக்கப்படுகின்றது.

Related posts: