பதவிகளை இழக்க போகும் முக்கிய அரசியல்வாதிகள்!

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஏ.எச்.எம். பௌசி ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட பின்னர், அவர்களிடம் குற்றச்சாட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், வேறு கட்சியின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி, இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த உத்தரவிட்டப்பட்டது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
விஜித் விஜயமுனி சொய்சா, ஏ.எச்.எம். பௌசி ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். கட்சியின் உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டால், இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
Related posts:
|
|