நீதிமன்றத்தில் கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயற்சி..!

Thursday, September 12th, 2019


யாழ் நீதிவான் நீதிமன்ற மறியல் அறைக்குள் சந்தேகநபர் ஒருவர் கழுத்தை பிளேட்டால் கீறி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரப்ரப்ஜபை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். கைதான நபர் கடந்த யூலை மாதத்தில் இருந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் திடீர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் உடனடியாக அவரை மீட்கப்பட்டுஇ யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: