நாட்டை பாதுகாக்க கூடிய ஒரே தலைவர் கோட்டபய ராஜபக்ச – விமல் வீரவன்ச!

Thursday, October 24th, 2019


பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை மீட்டதை போல், மீண்டும் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை மீட்டு பாதுகாக்க கூடிய ஒரே தலைவர் எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயா பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இந்த நாட்டு மக்கள் இன்று தீர்வினை பெற்றுகொடுக்க கூடிய ஒரு தலைவரை கோருகிறார்கள். தீவிரவாதிகளை விழ்த்தகூடிய ஒரு தலைவர் தீவிரவாதிகள் சஹரான் என்ற பெயரில் வந்தாலும் சுமனஶ்ரீ என்ற பெரில் வந்தாலும் வேலுபிள்ளை என்ற பெயரில் வந்தாலும் எந்த பெயர்களில் தீவிரவாதிகள் வந்தாலும் அவர்களை தோற்கடிக்க கூடிய ஒரு தலைவர் இந்த நாட்டின் மலையக மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்ககூடிய ஒரு தலைவர் விவாசாயிக்கு நிவராணம் வழங்க கூடிய விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த கூடிய அன்று எமது புனித நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுத்து போல் தவறான முறையில் நாட்டை ஆட்சி செயவோர்களிடம் இருந்து இந்த நாட்டை பாதுகாக்க கூடிய எமது தலைவர் அது கோட்டாபய ராஜபக்ஷ.

துட்டகைமுனு அரசன் இந்த நாட்டை பாதுகாத்து போல் எதிர்வரும் 16 ஆம் திகதி இந்த நாட்டை பாதுகாக்க கோட்டாபய ராஜபக்ஷ வருவார். ஒரு மக்கள் சந்திப்பு ஒன்று இருந்து, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் தொகை 500. அந்த கூட்டத்தில் இரும்பு மனிதர் ரணவக்க என்பவர் பேசினார். பேசி கொண்டு இருக்கும் போது இளைஞன் ஒருவன் எழுந்து கேள்வி ஒன்றை எழுப்பினார். கேள்வி எழுப்பியது மாத்திரம் தான் குறித்த இளைஞனை கிழே தள்ளி தாக்கினார்கள். மகன்மார்கள் வந்தால் அந்த இளைஞனுக்கு நடந்தது தான் எல்லோருக்கும் நடக்கும் மகன் இருந்த போது தந்தையின் காலத்தில் டயர் மாலை கழுத்துக்கு வந்தது.

இதுவா இந்த நாட்டின் ஜனநாயகம். இன்று ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க சஜித்திடம் கேட்கிறார் நீங்கள் வெற்றி பெற்றால் பிரதமராக்குவது ரணில் பிரேமேதாச அவர்களயா நீங்கள் வெற்றி பெற்றால் ரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சி பதவி வழங்குவீர்களா அல்லது சஹரான் போன்ற பயங்கரவாதிகளின் பின்னால் இருந்த ரிஷாட் பதியுதின் போன்றவர்களுக்கு அமைச்சு பதவி வழங்கபடுமா? நீங்கள் வெற்றி பெற்றால் சஹாரான் உடன் தொடர்புடைய ரவூப் ஹக்கிம் போன்றோருக்கு அமைச்சு பதவி வழங்குவீர்களா போன்ற கேள்விகளை கேட்ட போது இதற்கு நியாயாமான பதில் கிடைக்காவிட்டால் உங்களின் தேர்தல் வெற்றிக்கான நான் வேலை செய்ய போவதில்லை என கூறுகிறார். இதனை நான் கூறவில்லை வசந்த சேனாநாயக்க கூறுகிறார்.

இவ்வாறு வசந்த சேனாநாயக்க கேள்விகளை கேட்பது போல், ஐக்கிய தேசிய கட்சியிடம் நுவரெலியா மக்களும் கொத்மலை மக்களும் கேள்வி எழுப்ப வேண்டும். முடியுமானால் எமக்கு பதில் வழங்குங்கள் இல்லாவிட்டால் நாங்கள் உங்களுக்கு வாக்குகளை வழங்கமாட்டோம் என கூறுங்கள். நாங்கள் இன்று நூற்றுக்கு 65 வீத வாக்குகளின் அடிப்படையில் முன்னிலையில் இருக்கின்றோம். வரலாற்றில் அதிகூடிய வெற்றியினை பெறவார் கோட்டாபய ராஜபக்ஷ. கோட்டாபய மஹிந்த ராஜபக்ஷ இருவரும் ஒன்றாக இணைந்தால் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு. முதல் அபிவிருத்தியினையும் தருவார்கள் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Related posts: