நாடாளுமன்றம் செல்லும் நிதி மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கை!

அரசாங்க கணக்கு குழுவின் கடந்த நிதியாண்டின் நிதி மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கை நாடாளுமன்றின் அடுத்த அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது.
அரசாங்க கணக்குக் குழுவின் தலைவர் அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்துள்ளார்.
844 அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகள் இதில் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணக்காய்வாளரின் ஆவணத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட 26 விசாரணைகளின் அறிக்கையும் நாளைய நாடாளுமன்ற அமர்வின் போது முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்க கணக்குக் குழுவின் தலைவர் அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மறு அறிவித்தல் வரும் வரை யாழ்.பல்கலைகழகத்தின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தம் - பல்கலைக்கழக பதிவாளர் ...
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தீவிரம்!
சவாலான சூழ்நிலையிலும் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுவதற்கு ஒன்றபட்டு உழைப்ப...
|
|