சாரதிகளுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Thursday, October 17th, 2019

சாரதிகள் அல்லது வாகன உரிமையாளர்கள் தொலைபேசி இலக்கங்களை வெளியிடாமல் சந்தேகத்திற்கிடமான முறையில் வீதிகளில் வாகங்களை நிறுத்த வேண்டாம் என பொலிஸார் மீண்டும் அறிவித்துள்ளனர்.

அவ்வாறு நிறுத்தி சென்றால் வாகனத்தின் பகுதிகள் முழுமையாக அகற்றி சோதனையிடப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மட்டக்குளியில் நேற்று காலை சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பரவிய வெடிகுண்டு வதந்தி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த மோட்டார் வாகனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்ததாக பின்னரே தெரியவந்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: