கடும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Friday, August 30th, 2019


நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் அளவில் மழைப் பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக வடமத்திய மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும், மத்திய மலைநாட்டிலும் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் அளவில் கடுமையான காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் அளவில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மீனவர் சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts:


புதிய அரசியலமைப்பு சிறந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கின்றேன் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹ...
பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது – கொழும்பு ஐ.டி.எச் வை...
யாழ் மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை ஏற்க முடியாது – திங்களன்று மாவட்ட செயலகத்தை முற்ற...