ஐ.நா.அறிக்கையாளர் அஹமட் சஹீட் இலங்கை விஜயம்!

Wednesday, August 14th, 2019


ஐக்கிய நாடுகளின் சமய அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான அறிக்கையாளர் அஹமட் சஹீட் நாளைய தினம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பிலுள்ள அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளைய தினம் இலங்கை வரவுள்ள அவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்துக்கான உரிமைகளை இலங்கை எவ்வாறு மேம்படுத்தி வருகிறது என்பதே தொடர்பில் ஆராய்வதற்காக அவர் இலங்கை வரவுள்ளார்.

இதன்போது அவர் அரசாங்கத்தின் அதிகாரிகள், சமய சமூகங்களின் அல்லது நமபிக்கைகளைக் கொண்டிருக்கும் சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.

இதன்போது பெற்று கொள்ளப்படவுள்ள அனுபவங்கள், முன்னேற்றங்கள் மற்றும் தரவுகளை கொண்ட அறிக்கை ஒன்றை அவர் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கவுள்ளார்.

Related posts: