ஊடகங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் கடும் எச்சரிக்கை! !

Thursday, October 17th, 2019


அரச மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் தாம் விரும்பும் கட்சிகளுக்கு சார்பாக பொதுமக்களை திசை திருப்பும் தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 19 வது அரசியல் திருத்த சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

ஒரு வார காலம் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் செய்திகள் உட்பட ஊடகங்களின் செயற்பாடுகள் கண்காணிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தன்னிச்சையாக செயற்படும் ஊடகங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, மூன்று வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் அறிவிடப்படும் என எச்சரித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்ரிய இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Related posts: