இலஞ்சம் பெற்ற 08 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்!

Tuesday, September 17th, 2019


8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ பிரதேசத்தின் விடுதியொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்து தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை விடுதலை செய்த குற்றத்திற்காக சிலாபம் பொலிஸ் பிரிவுடன் இணைந்த இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6 ஆம் திகதி வென்னப்புவ பிரதேச விடுதியொன்றில் பண பந்தய சூதாட்டத்தில் ஈடுபடட 20 க்கும் அதிகமான சந்தேக நபர்களில் 9 பேரை மட்டுமே கைது செய்துள்ளதாகவும் குறித்த பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: