இன்றும் நாளையும் மழையுடனான காலநிலை தொடரும் – வானிலை அவதான நிலையம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் நாளையும் நீடிக்கும் எனவும், அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
Related posts:
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து - சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக் அறி...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை இலங்கைக்கு வருகை - இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்...
இலங்கையில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை - சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அரச தல...
|
|