இன்டர்போலின் உதவியை கோரியுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்டர்போலின் உதவியை கோரியுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் இன்டர்போல் வழங்கிய பதக்கத்தை பெற்றுக் கொண்ட பின்னர் அவர் இவ்வாறு உதவி கேட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் நிதி மோசடி குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்வதற்காகவே இவ்வாறு உதவி கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை விரைவாக கைது செய்வதற்காக ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, படையினர் மற்றும் உளவுத்துறை பிரிவினர் எடுத்துள்ள நடவடிக்கைகளை இன்டர்போல் பொதுச் செயலாளர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அறுவடை தொடர்பில் கட்டமைப்பை தயாரிக்குமாறு பணிப்புரை : விவசாய அமைச்சர்!
2021 ஜனவரி 18 ஆம் திகதி 2020 ஆம் ஆண்டுக்கான O/Lட பரீட்சை ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
மாதச் சம்பளத்தை கொவிட் நிதிக்கு வரவு வைக்கக் கோரி அமைச்சர் பந்துல குணவர்தன கடிதம்!
|
|