இந்தியப் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது!

Thursday, September 19th, 2019


தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது அமெரிக்காவில் எதிர்வரும் 24ஆம் திகதி வழங்கப்படுகிறது.

பிரதமர் மோடி, இந்தியாவில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின்படி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி நாட்டில் தூய்மை பாதுகாப்பை அடைவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

குறித்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 98 சதவீத கிராமங்களில் கிராமப்புற சுகாதார பாதுகாப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சாதனைக்காக பிரதமர் மோடிக்கு புகழ் பெற்ற அமெரிக்க தொழில் அதிபர் பில்கேட்ஸ், மெலிந்தா அறக்கட்டளையின் ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: