அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்!

Monday, September 2nd, 2019


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரதேச செயலகங்களில் பணி புரியும் சுமார் 16 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில்முறை பிரச்சினைகளுக்காக அரசாங்கத்தினால் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்காமைக்கு எதிராகவே குறித்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கபடவுள்ளது.

கம்பெரலிய திட்டத்தினை செயற்படுத்துவதற்கான கொடுப்பனவுகள் பெற்றுக் கொடுக்கப்படாமை, கிராம சக்தி வேலைத்திட்டத்தினை செயற்படுத்தியமைக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்படாமை, மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை, போக்குவரத்து கொடுப்பனவுகள் வழங்கப்படாமை போன்ற விடயங்களை முன்வைத்தே இந்த பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை அவர்களின் பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் திகதி நாளை அறிவிக்கப்படும் என அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: