அதிகரித்துச் செல்லும் முட்டையின் விலை !

Thursday, October 17th, 2019


சந்தையில் முட்டைகளின் விலை அதிகரித்து வருவதன் காரணமாக பேக்கரி பொருட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பான், கேக் உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஒரு முட்டையின் விலை 16.50 ரூபாவிலிருந்து 21 ரூபா வரை உயர்ந்துள்ளது.

மேலும் எதிர்வரும் கிரிஸ்துமஸ் பண்டிகையின் போது ஒரு முட்டையின் விலை 25 ரூபா வரையில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: