ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானம்?

Wednesday, April 11th, 2018

சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கு எதிரா கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் இன்று நள்ளிரவிற்கு பின்னர் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தேசிய அரசாங்கத்தில் வகித்த சகல பதவிகளில் இருந்து தாம் விலகவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதா இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: