ஸ்ரீலங்கன் விமானசேவையை குறுகிய காலத்திற்குள் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை!

Friday, April 6th, 2018

பாரிய நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் விமானசேவையை குறுகிய காலத்திற்குள் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய பணிப்பாளர் சபைத்தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ரஞ்சித் பெர்னாண்டோ தலைமையிலான பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். மறுசீரமைப்பின் மூலம் புதுப்பொலிவை ஏற்படுத்தி நிறுவனத்தை முன்னேற்றகரமாக செயற்படுவதற்கான மறுசீரமைப்பு ஆலோசனைகள் தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனம் இந்த நாட்டின் தேசிய சொத்து. பொதுமக்கள் மத்தியில் தேசிய வளமாக இதனை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பிலான ஈடுபாட்டை கட்டியெழுப்புவதே தமது பணிப்பாளர் சபையின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts: