வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கான பதிவு கட்டணம் குறைப்பு!

Friday, December 6th, 2019

புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு அமைவாக பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைக்கு அமைவாக அறவிடப்படும் வரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறுசீரமைப்பதற்கு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வரி நிவாரணத்தின் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பணியாளர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செலுத்த வேண்டிய பதிவு கட்டணம் மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விபரம் பின்வருமாறு: முன்னைய கட்டணம் (ரூபா) மறுசீரமைக்கப்பட்ட புதிய கட்டணம்

பதிவு கட்டணம் 17, 837  – 16,416 பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் 3,755 – 3,456 இந்த கட்டண நடைமுறை 2019.12. 01 முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது

Related posts: