வேலணை அராலிச் சந்தியில் விபத்து – கணவன் பலி, மனைவி படுகாயம்!

Monday, February 6th, 2017

வேலணை அராலிச்  சந்தியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த டிபர் வாகனமும் அராலிப் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் மோதியததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் வேலணைப் பகுதியைச் சேர்ந்த தவனேஸ்வரன் பிரபாகரன் (வயது 29) என்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இதேவேளை படுகாயமடைந்த அவரது மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

media-share-0-02-06-ab94a9d80b4824b3ab2f90761bebacd43a93917beb482cb272fc4d8338f8a906-87262d1a-66fa-4650-8943-d26f161ce4f8

media-share-0-02-06-dee84b0b6ebf9e4f45ee4369fb8b360c919c2edba1ed38f035fb08a26c7e3dab-ad021c31-a7ac-43d6-8d6a-fb0f057a3da3

Related posts: