வெளிநாட்டு தபால்கள் மற்றும் பொதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் – தபால் மா அதிபர் அறிவிப்பு!
Thursday, April 23rd, 2020மீள் அறிவித்தல் வரை வெளிநாட்டு தபால்கள் மற்றும் பொதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தபால் திணைக்களம் அனைத்து தபாலகங்களுக்கும் அறிக்கை ஊடாக அறிவித்துள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் பகுதிகளில் தபாலகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ள அவர் தற்போதுள்ள சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே எதிர்வரும் நாட்களில் புகையிரதத்தில் பயணம் செய்ய எதிர்பார்த்துள்ள பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதார பிரிவினர் பல புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதற்கமைய முச்சக்கர வண்டிகளில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிகையலங்கார நிலையங்களை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|