வெளிநாட்டில் 196 இலங்கை பெண்கள் பலி – வெளிவிவகார அமைச்சு!
Wednesday, December 21st, 2016மத்திய கிழக்கு நாடுகளில் பணியில் ஈடுபடும் போது உயிரிழந்த 39 இலங்கை பணிப்பெண்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்கு 720 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், கட்டார், குவைத், ஓமன், லெபனான், ஜோர்தான் ஆகிய நாடுகளில் உயிரிழந்த பணிப்பெண்களின் குடும்பங்களுக்கே இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளிநாட்டில் உயிரிழந்த மற்றும் ஊனமடைந்துள்ள நிலையில் உள்ள இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக இழப்பீடு வழங்கும் நடவடிக்கை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் தலதா அத்துகோரளவின் தலைமைத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு இழப்பீடு வழங்குவது இந்த வருடத்தில் ஐந்தாவது முறை என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியினுள் வெளிநாட்டில் பணி செய்து கொண்டிருக்கும் போது உயிரிழந்த 196 பேரின் குடும்பத்தினருக்காக 3450 லட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 5 வருட காலத்தினுள் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ள பணத்தில் அதிகமான பணம் இந்த வருடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|