வெளிநாடு சென்ற 400 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் நாடு திரும்பவில்லை – பிணையாளர்களிடம் பணம் அறவிட நடவடிக்கை!

Saturday, July 28th, 2018

உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் நாடு திரும்புவதில்லை என உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் பட்டப்படிப்பிற்காக 60 இலட்சம் ரூபா வரை அரசாங்கத்தினால் செலவிடப்படுவதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக பயிற்சிக் காலத்தின்போது அவர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் விரிவுரையாளர்கள் மீண்டும் நாடு திரும்பாதமையால் அரசாங்கத்திற்கு வருடமொன்றுக்கு மட்டும் பல கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்தப் பிரச்சினை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி மேற்படி விரிவுரையாளர்களுக்காக அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட நிதியை அவர்களிடமே மீண்டும் அறவிடுவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி பிணையாளர்களிடம் இந்தப் பணத்தை அறவிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர் கல்வி அமைச்சின் தகவல் படி 400 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: