வெளிநாடுகளில் தொழில்புரிவோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் !

வெளிநாடுகளில் தொழில் புரியும் பெற்றோரினது பிள்ளைகளின் எதிர்கால கல்வி மேம்பாட்டுக்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொழில் பயிற்சிகள் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத்தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
க.பொ.த சாதாரண தரம் க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்து இவர்களின் பெற்றோர் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களாக இருந்தால் இவர்களுக்கு மாதாந்தம் புலமைப்பரிசில் தொகை வழங்கப்படும்.
இதற்கிணங்க 2016 ஆம் ஆண்டில் தரம் 5 இல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 876 மாணவர்களுக்கு மாதாந்தம் தலா 15000 ரூபா வீதம் 1 கோடியே 31 இலட்சம் ரூபாவையும் 2015 ஆம் ஆண்டில் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 1712 பேருக்கு தலா 20000 ஆயிரம் ரூபா வீதம் 3 கோடியே 41 இலட்சம் ரூபாவையும் 2015 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான 388 மாணவர்களுக்கு தலா 3000 ரூபா வீதம் 1 கோடியே 16 இலட்சம் ரூபாவை உதவியாக வழங்குவதற்காக ஒதுக்கியுள்ளதாக வும் அவர் தெரிவித்தார்.
Related posts:
|
|