வெற்றிடமாகவுள்ள தபாலதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

Tuesday, November 22nd, 2016
யாழ். பிரதம தபாலக அஞ்சல் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் 49 தபாலதிபர்களுக்கான பயிற்சிகள் எதிர்வரும்-25 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. பயிற்சி நெறியின் முடிவில் தரம் மூன்றைச் சேர்ந்த தபாலதிபர்கள் வெற்றிடமாகவுள்ள தபாலகங்களுக்கு நியமனம் பெற்றுச் செல்லவுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் 355 தபாலதிபர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மூன்றாம் தரத் தபாலதிபர்கள் தபால் பயிற்சிக் கல்லூரிகளில் இடம்பெறுகின்ற மூன்று வாரப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
SRI-LANKA-POST

Related posts:

எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்கள் குறித்து கிறிஸ்தவ மதகுருமார் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் – அமை...
இவ்வருடம் ஏற்பட்ட விபத்துக்களால் கிளிநொச்சியில் 42 பேர் பலி - வீதி நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்க...
2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – உரிய கால எல்லைக்குள் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும...