வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு!

Saturday, July 14th, 2018

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி பாண் உள்ளிட்ட அனைத்து வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றையதினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படும் எனவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்தார்.

Related posts: