வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பட்டிருந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு ஈ.பி.டிபி யின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனால் தீர்வு!

Saturday, September 19th, 2020

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பட்டிருந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தீர்வினை வழங்கியுள்ளார்.

முன்பராக வவுனியா வடக்கு அபிவிருத்திக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான விடயத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்தறிந்துகொண்ட திலீபன் பொலிசாருடன் அப்பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுக்களை நடத்தி தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளார்.

குறிப்பாக பொலிசார் ஆலயத்திற்கு வருபவர்களை வீடியோ எடுத்தல், ஆலய வழாகத்திற்குள் காலணிகளுடன் உட்செல்லுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த ஆலயத்தில் நடைபெறுவதாகவும் இதனை நிறுத்துவதுடன் வழிபாட்டிற்கு வருபவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிசாரிடம் திலீனால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.ஷஇதையடுத்து ஆலய சூழலின் புனிதத் தன்மையை கருத்தில் கொண்டு அதற்கு பொலிஸார் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: