வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடிப்போரை பிடியுங்கள் பாதுகாப்பு பிரிவினருக்கு அமைச்சர் உத்தரவு!

Tuesday, January 31st, 2017

மீன்பிடி நடவடிக்கைகளின் போது வெடிபொருட்களைப் பயன்படுத்தும் மீனவர்களைக் கைது செய்யுங்கள் எனக் கடற்றொழில் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பாதுபாப்பு பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களை விற்பனை செய்வோரையும் கைது செய்யுமாறு அமைச்சர் இதன்போது பாதுகாப்பு பிரிவினரிடம் கூறியுள்ளார். மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அதிகளவில் வெடிபொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று கடற்றொழில் அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. டைனமைட் போன்ற வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடிக்க வேண்டாம் என்று மீனவ்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சில மீனவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் மீன்வளம் அழிவுக்குள்ளாகும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கிறது. இதனால் இலங்கையின் கடற்பரப்பில் மீனவர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெடிபொருட்ளைப் பயன்படுத்திப் பிடிக்கப்படும் மீன்களைச் சந்தைக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டிருக்கின்றது. எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

9ff5b5946c7242877a6c965ef3f70b0d_XL

Related posts:

நீர் விநியோகிக்கும் விடயத்தை அரசியலாக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உ...
பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன - கல்வி அமைச்...
இலங்கை - மியன்மார் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பு - பிரதமர் தினேஷ் குணவர...