வீதி செப்பனிடல் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆராய்வு!

நீண்டகாலமாக செப்பனிடப்படாது காணப்பட்ட அராலி கணவக்கை வீதி, மற்றும் பித்தனை மயான வீதிகளின் புனரமைப்பு தொடர்பான முன்னெடுப்புக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த குறித்த வீதிகளின் புனரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த வீதிகளின் அளவுப்பிரமாண நடவடிக்கைகளை வலிமேற்கு பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நேற்றையதினம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த பகுதிக்கு சென்ற சிவகுரு பாலகிருஷ்ணன் அவ்வீதியின் செப்பனிடல் தொடர்பான நடவடிக்கைகளை பார்வையிட்டதுடன் வீதி புனரமைப்பின்போது ஏற்படும் இடர்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வலிகாமம் வடக்கு கட்டுவன் மேற்கு பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பம் ஒன்றிற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களால் தற்காலிக வீடு ஒன்று புனரமைத்துக் கொடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகளையும் சிவகுரு பாலகிருஷ்ணன் தலைமையிலான முக்கியஸ்தர்கள் சென்று பார்வையிட்டதுடன் அக்குடும்பத்தினரது அத்தியாவசிய பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|