வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசம் கட்டாயம் – பிரதி பொலிஸ் மாஅதிபர் வலியுறுத்து!
Friday, March 26th, 2021
தமிழ் , சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டல்களை அவசியம் கடைப்பிடிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.
கொவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பான அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கொவிட்-19 வைரஸ் தொற்று இன்னும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், தமிழ் -சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பேணுவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்றும் கடும் மழை பெய்யும்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி - ஜனாதிபதி கோட்டப ராஜபக்ச இடையே அபிவிருத்தி உள்ளிட்ட பல முக்கிய விடயங்...
பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு சலுகை வழிமுறைகளை அறிவ...
|
|
|


