வீடு வசதிகள் அற்ற ஊடகவியலாளர்களுக்கு ஊடக கிராம வேலைத்திட்டம் – அமைச்சர் கயந்த கருணாத்திலக்க!

Monday, January 16th, 2017

இந்த வருடத்தில் ஊடக கிராம வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாத்திலக்க தெரிவித்துள்ளார்.

காலி தக்கின லங்கா ஊடக மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த விடயத்தை கூறினார்.

வீடு வசதிகள் அற்ற ஊடகவியலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கிராம நிர்மாணப் பணிகளுக்கு காணிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன. இந்த செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக காலி ஹக்மீமன பிரதேசத்தில் முதலாவது கிராமம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஊடக கிராமம் ஒன்றை அமைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

60a63ae987a32ab63ed97252eedf902e_XL

Related posts: