வீடுகள் கட்டடங்களை வாடகைக்கு வழங்குவோர் கிராம அலுவலரிடம் பதியவும்!

Tuesday, May 7th, 2019

வவுனியாவில் வாடகைக்கு வீடுகளை வழங்குவோர் அங்கு தங்கியிருப்பவர்களின் விபரங்களை தத்தமது பிரிவு கிராம அலுவலர்களுக்குத் தெரிவித்துப் பதிவு செய்திருத்தல் வேண்டும். அவ்வாறே அங்கு தங்கியிருப்போரும் தங்கியிருக்கும் பிரிவுக்குரிய கிராம அலவலரிடம் சென்று பதிவு செய்திருத்தல் வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கல்வி நோக்கில் அல்லது தொழில் நோக்கில் அல்லது வேறு தேவைகள் கருதி வருவோர் வவுனியாவில் தங்கியிருக்க வேண்டிவரின் அவர்கள் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருந்தால் அவற்றை வாடகைக்கு விடுவர். அவர்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

நாட்டில் அவசரகாலச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் கடமைகள் வழங்கப்பட்டுள்ளன. எங்கும் சோதனை நடவடிக்கை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நபரைக் கைது செய்வதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உங்களது கிராமத்துக்கு வரும் நபர்கள் தொடர்பாக நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கிராமத்தில் வசிப்பவர்களுக்கு இங்குள்ளவர்களை நன்கு தெரியும். புதியவர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டும்.

Related posts: