விவசாய உற்பத்தி தொடர்பாக புள்ளி விபரங்களை சரியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை – விவசாய இராஜாங்க அமைச்சர்!

Friday, January 3rd, 2020

விவசாய உற்பத்தி தொடர்பிலான தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களை சரியான முறையில் பெற்றுக்கொள்வதற்காக புதிய நடைமுறை ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் மற்றும் விவசாயிகள் ஆகிய 2 பிரிவினரையும் அழுத்தத்துக்கு உள்ளாக்கும் விலைக் குறைவு வீழ்ச்சியை தவிர்ப்பதற்காக சரியான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு இதன் மூலம் முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

போதுமான அளவு அரிசி மற்றும் நெல் இருப்பதாக ஒரு தரப்பினர் தெரிவிக்கும் பொழுது மற்றொரு புறத்தில் அரிசி தட்டுப்பாடு இருப்பதாக தெரிவிக்கப்படுவது தொடர்பாகவே இராஜாங்க அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

விவசாய சேவை திணைக்களம் கொண்டுள்ள புள்ளி விபரங்களுக்கு அமைவாக கணக்கிட்டுப்பார்த்தால் நெல் உற்பத்தி மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது.

ஆனால் தற்பொழுது அரிசிக்கு தட்டுப்பாடு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இது எப்படி முடியும்? இதுவே பிரச்சினையாகும்.

இங்கு ஏதோ பிரச்சினை உண்டு பொதுமக்கள் எப்பொழுதும் சிரமங்களை எதிர்கொள்ள கூடாது என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: