விவசாயிகளுக்கான முதல் கட்ட இழப்பீடு வங்கிக் கணக்குகளில் வைப்பீடு!

இவ்வருட பெரும் போக காலத்தில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான முதல் கட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இது பற்றித் தெரிவித்த கமநல காப்புறுதிச் சபைத் தலைவர் சிட்னி கஜநாயக்க, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுக்காக சுமார் 730 கோடி ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது என்றும், பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டவர்களுக்கும், வறட்சியால் பயிரிட முடியாமல் போனவர்களுக்கும் இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும், தேசிய சேமிப்பு வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஊடாக இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
Related posts:
இலங்கைக்குள் நுழைய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
தடுப்பூசியைப் பெறவில்லை என்றால், உடனடியாக தெரியப்படுத்துங்கள் – கல்விசார் ஊழியர்களுக்கு கல்வி அமைச்ச...
கிண்ணியா கோர விபத்து - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
|
|