விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு – எந்தவித இலாபமும் இதனூடாக கிடைக்காது என வலுசக்தி அமைச்சர் விளக்கம்!

அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு அமுலாக்கப்பட்டுள்ளதென, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த விலை சூத்திரத்தில் இறக்குமதி, தரையிறக்கம் மற்றும் விநியோக செலவுகள் என்பன உள்ளடக்கப்பட்ட போதிலும் இலாபம் சேர்க்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலை மற்றும் ஏனைய காரணிகள் என்பவற்றை கருத்தில் கொண்டு இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான செலவு, தரையிறக்குவதற்கான செலவு, விநியோகிப்பதற்கான செலவு மற்றும் வரி கட்டணம் என்பற்றின் அடிப்படையில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் எந்தவித இலாபமும் இதனூடாக கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|