விலை உயர்வை கட்டுப்படுத்த அரிசியை இறக்குமதி செய்ய யோசனை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Monday, June 21st, 2021அரிசியை இறக்குமதி செயவதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது என வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் நிலவிவரும் அரிசி விலை உயர்வினை கட்டுப்படுத்துவதற்கு ஒரு இலட்சம் மெற்றிக் தொன் எடையுடைய அரசியை இறக்குமதி செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 140 ரூபாவாக உள்நாட்டு சந்தையில் விலை உயர்வடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அரிசியை இறக்குமதி செய்தால் ஒரு கிலோகிராம் 100 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும், அப்பொழுது அரிசி ஆலை உரிமையாளர்கள் விலையை குறைக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பிள்ளைகளுக்குக் அதிக தண்டனை வழங்கும்போது அந்த வன்மம் மாற்றீட்டுக் கோபமாக மாறும் அபாயநிலை உருவாகின்றக...
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக புதிய வகை பக்டீரியா!
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை - சிறுமி பலி – ஒருலட்சத்திற்குட் அதிகமானோர் பாதிப்பு!
|
|