விரைவுத் தபால் , மருந்து விநியோகத்திற்காக தபால் அலுவலகங்கள் இன்று சேவைமுன்னெடுப்பு!

விரைவுத் தபாலில் அனுப்பப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் அரச வைத்தியசாலைகள் ஊடாக வழங்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் அனைத்தையும் விநியோகிப்பதற்காக இன்று தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் தமது சேவையை முன்னெடுத்திருந்தன.
அத்’துடன் தபால் விநியோகம் செயற்படுத்தப்படாத அலுவலகங்கள் மாத்திரம் இன்று மூடப்பட்டதாகவும் பிரதி தபால்மா அதிபர் துசித்த ஹூலங்கமுவ தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய வர்த்தக கடிதங்களை கையளிக்க வேண்டுமாயின் 071 8 123 906 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக மத்திய தபால் பரிமாற்றகத்தின் அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு தபால்மா அதிபர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது
கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை!
சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவ...
|
|