விரைவில் மாகாண சபை தேர்தல் – மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவிப்பு!

Friday, August 14th, 2020

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,

மாகாண சபை தேர்தலை புதிய முறைமையிலா அல்லது பழைய முறைமையிலா நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும்.

அந்த தீர்மானத்திற்கு ஆளுநர் என்ற வகையில் தம்மால் இயன்ற ஆதரவை வழங்கவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related posts: