விரைவில் தேசிய மீன்பிடித்துறை சட்டமூலம் அமைச்சரவைக்கு!

Saturday, March 3rd, 2018

இம்மாத இறுதிக்குள் தேசிய மீன்பிடித்துறை சார்ந்த சட்டமூலத்தை அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான அறிவுறுத்தலை கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

இந்த சட்டமூலத்தின் முக்கிய நோக்கம் மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சை முறையாக முன்னெடுத்துச் செல்வதேயாகும். இது தொடர்பான சட்டமூல பிரேரணையைதயாரிப்பதற்கு நோர்வே அரசாங்கத்தின் பூரண ஆதரவு கிடைத்துள்ளது.

மேலும் இந்த சட்டமூல ஆக்கத்திற்கென உரிய தரப்பினர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளும் கிடைத்துள்ளன.

Related posts: