விமான சேவை அட்டவணை மாற்றம்!

Monday, October 15th, 2018

குளிர்காலத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை நேர அட்டவணையில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவிக்கையில், எதிர்வரும் 28ஆம் திகதி முதல் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் வரையில் ஏ-330 விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் சிங்கப்பூருக்கு இடையில் மேற்கொள்ளப்படும் விமான சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.
இதற்கமைவாக வாரத்தில் மேற்கொள்ளப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கை 17 இல் இருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts: