வித்தியா படுகொலையின் சந்தேகநபர்கள் கொலைமிரட்டல் குறித்து வழக்கு தாக்கல்!

Thursday, April 6th, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மீது மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்துள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுத்த வழக்கு நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“பழிவாங்கும் நோக்குடன் எம்மை கைதுசெய்த பொலிஸ் உத்தியோகத்தரை வெளியில் வந்த பின்னர் வெட்டுவோம்” என 2016ஆம் ஆண்டு குறித்த சந்தேகநபர்கள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே இவ்வாறு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. குறித்த கொலை மிரட்டல் தொடர்பான வழக்கு நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தேவையேற்படின் காஸாவில் இருந்து இலங்கையர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் தா...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...
தேர்தல் தொடர்பில் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!.