வித்தியா கொலை வழக்கில் முக்கிய சாட்சி வெளியானது!

Thursday, June 30th, 2016

மாணவியின் வித்தியா கொலை தொடர்பில் முக்கிய சாட்சியயொன்று வெளிவந்துள்ளதாகவும், அந்தச் சாட்சியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அந்தச் சாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் என குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கறித்த மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாஸ் முன்னிலையில், நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுப் பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.

விசாரணை மேற்கொள்ளப்படும் சாட்சி விரைந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் அதேவேளை, இந்த வழக்குத் தொடர்பில் விவரங்கள் தெரிந்தவர்கள், தாமாக முன்வந்து தகவல்கள் தந்தால், விசாரணையை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் குற்றப்புலனாய்வு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts: