வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு 

Thursday, June 1st, 2017
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் புதன்கிழமை சந்தேகநபர்கள் பத்து பேரும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம்- 14ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிவான்  உத்தரவிட்டார்

Related posts: