விஜயகலாவை பதவி விலக்குமாறு பிரதமர் அறிவிப்பு!

Tuesday, July 3rd, 2018

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தற்போது எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து அவரை உடனடியாக பதவி விலகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பிலான விபரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் புலிகளின் மீள் எழுச்சி குறித்து அமைச்சர் விஜயகலா கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமரின் அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: