விக்கியை விமர்சித்து நான் பிழைக்க வேண்டியதில்லை – தவராசா!

Thursday, April 11th, 2019

நான் நேற்று அரசியலுக்கு வந்தவன் அல்ல. ஆரம்பகால இயக்க போராட்டத்திலிருந்து அரசியலுக்கு வந்தவன். இவரை விமர்சித்துத்தான் நான் அரசியல் செய்ய வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை. அதற்காக உண்மைகளை மூடிமறைப்பதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரனுக்கு திராணி இருந்தால் அறிக்கை விடுவதை நிறுத்தி விட்டு ஊடகங்களுக்கு முன்பாக ஆதாரத்துடன் பதில் கூறத் தயாரா?

இவ்வாறு சவால் விடுத்துள்ளார் வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு விவகாரத்தில் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நியமித்த விசாரணைக்குழுவில் அதிகாரிகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு பிழையான அறிக்கையைத்தயாரித்து வெளியிட்டனரா? என்ற சந்தேகம் எழுவதால் குறித்த விடயம் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப்பிரிவினர் விசாரணை செயது; குற்றவாழிகளை சட்டத்தின் முன் நிறுத்தமாறு அதன் பணிப்பாளருக்குக் கட்டளையிட்டது.

அப்படியாயின் அந்த விசாரணக்குழுவை நியமித்தது யார்? வடக்குமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் காலாகாலமாகக் காப்பாற்றி வரும் முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனே நியமித்தவர். இதே முன்னாள் விவசாய அமைச்சர் வடக்குமாகாணசபையின் அமர்வில் நொதேர்ன் பவர் நிறுவனத்தை கடுமையாகச்சாடி கருத்துக்களை முன்வைத்தார். அதற்கு அடுத்த அமர்வில் தனது நிலைப்பாட்டை மாற்றி தாமாகவே நிபுணர் குழு ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்தார்.

நிபுணர் குழுவை நியமிக்கும் போதே அதிகாரம் இல்லை என்று கூறியிருந்தேன். அதனை மீறி நியமித்து நிதி செலவளிக்கப்பட்டு இடைக்கால அறிக்கையும் வெளியிடப்பட்டது.

சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் மாசுக்கள் எவையும் இல்லை கலக்கவில்லை என கூறப்பட்டது. நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையிலும் இதே பதிலே கூறப்பட்டது. அதனைத்தவிர்த்து ஏனைய விடயங்களில் நீதி மன்றம் தலையிடாது – என்றார்.

Related posts: