வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தேர்தல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழில் பேரணி

Thursday, June 2nd, 2016

வாக்காளர் தினம்  நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுவதை  முன்னிட்டு தேர்தல்கள் திணைக்களத்தினால் நேற்று புதன்கிழமை(01-06-2016)  காலை யாழ். பிரதான பேருந்து நிலையத்திலிருந்து யாழ். மாவட்டச்  செயலகம் வரை  பேரணி  நடத்தப்பட்டது.  வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தேர்தல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ். பிரதான பேருந்து நிலையத்திலிருந்து நேற்று  காலை-8.45 ம் மணியவில் ஆரம்பமான பேரணி ஆஸ்பத்திரி வீதியூடாக காலை-9.45 மணியளவில் யாழ். மாவட்டச்  செயலகத்தைச்  சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் விழிப்புணர்வு  நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் கே. தவலிங்கம், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்