வாக்களிக்கத் தவறியவர்களிடமிருந்து கட்டணம் அறவிட தேர்தல் ஆணைக்குழு முடிவு!

Saturday, February 3rd, 2018

இன்று (02) மட்டும் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இறுதிச் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் அவ்வாறு வாக்களிக்காத அனைவரிடமும் காரணம் கோருவதற்குதேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஒரு தபால் மூல வாக்குக்காக சுமார் 750 ரூபாவினை செலவிடுவதாகவும் இவ்வாறு வாக்களிக்கத் தவறுவது அரச செலவைத் துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும்எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தபால் மூல வாக்காளர்கள் வாக்களிக்காத காரணத்தால் மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு அவர்களுக்குரிய வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் வாக்களிக்காதவர்களிடம் காரணங்களைக் அறிந்த பின்னர் அவர்கள் நியாயமான காரணங்களைக் கூறத் தவறும் பட்சத்தில் அவரிடமிருந்து தேர்தலுக்காகசெலவிடப்பட்ட தொகை அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: