வாகன சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

Tuesday, July 4th, 2017

ரயில்வே கடவைகளின் ஊடாக சட்டத்தை மீறி செல்லும் வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

ரயில்வே கடவைகளில் சிவப்பு நிற சமிக்ஞை விளக்கு ஒளிர்கின்ற வேளையில் சென்ற  37 வாகன சாரதிகளுக்கு எதிராக 53 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.

இந்த தொகை கடந்த 27, 29 ஆகிய தினங்களில் அறவிடப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, அழுத்கம, கொழும்பு, கண்டி ஆகிய இடங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரெயில் தண்டவாளத்தில் நடப்பதும், தண்டனைக்குரிய குற்றமாகும். ரெயில் மிதிபலகையில் பயணிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது திணைக்களத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி அனுர பிறேமரத்ன மேலும் தெரிவித்தார்.

Related posts: