வாகன இறக்குமதி விவகாரம் – காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, June 15th, 2023

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து பல காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் சமீபத்திய கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் பல காரணிகளை கருத்திற்கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சுமார் 4,000 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 3,000 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சமஷ்டி வேண்டாம் என சுமந்திரன் சொல்லியிருப்பாரா? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி...
தொடர்ந்தும் இரண்டாயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு – சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!
விக்னேஸ்வரன் நிர்வாக ஞானம் என்ன என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இந்த உலகே அறியும் – அவர் தொடர்பில்...